top of page

நிலம் வகுப்பறை.. வானம் கரும்பலகை..

Writer: Drama Selvam
Drama Selvam
Sep 29
1 min read

ஒரு வகுப்பறையின் அனைத்து குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்து, ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டு, அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றிப் பேசச் சொல்லும்போது, அது குழந்தைகளுக்குள் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகிறது.


மற்ற குழந்தைகளுக்கும் கேட்கும்படி சத்தமாகப் பேசும்போது, தன் குரலின் மீது குழந்தைக்கு நம்பிக்கை பிறக்கிறது. தன்னைப் பற்றிப் பேசுவதன் மூலம் தன்னம்பிக்கையைப் பெறுகிறது. அதே நேரத்தில், இன்னொரு குழந்தைக்கு என்ன பிடிக்கும், அது எதை ரசிக்கிறது, எதைப் பற்றி சிந்திக்கிறது என்பதையும் தெரிந்துகொள்கிறது.


யாரும் உயர்ந்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை என்ற உணர்வுடன், அனைவரும் சமமாக நின்று பேசுகிறார்கள். அங்கே சமத்துவமான கல்விக்கான ஒரு சிறிய அங்கீகாரம் கிடைக்கிறது.


இந்தப் பயிற்சியின் நடுவில் ஒரு குழந்தை என்னிடம் வந்து,


“சார், நான் முதல் முறையாகப் பேசினேன். இப்போது எனக்குக் கூச்சமே இல்லை, பயமே இல்லை!”


என்று சொன்னது.


அந்த ஒரு குழந்தையின் வார்த்தைகள்தான் இந்தப் பயிற்சியின் மிகப் பெரிய வெற்றி என்று நான் பார்க்கிறேன்.


ஏனென்றால், அந்த நாளில் அந்தக் குழந்தை பேசுவதற்கு மட்டும் கற்றுக்கொள்ளவில்லை.

தன்னுடைய குரலுக்கு மதிப்பு இருக்கிறது என்பதையும், தன்னால் மற்றவர்களின் கண்களைப் பார்த்துப் பேச முடியும் என்பதையும் கற்றுக்கொண்டது.

Comments


bottom of page