சேர்ந்து செய்வதே செயல்பாடு
Updated: Sep 29

“இதைப் படியுங்கள், இதை எழுதுங்கள், இதை வரையுங்கள், இந்தக் கணக்கைச் செய்யுங்கள்” என்று குழந்தைகளுக்கு ஒரு செயல்பாட்டைக் கொடுத்துவிட்டு, ஆசிரியர் ஓரமாக ஒதுங்கி நிற்பது மட்டுமே ஆரோக்கியமான கற்றல் செயல்பாடாக மாறிவிடாது.
குழந்தைகளோடு இணைந்து செய்வதே சிறப்பான கற்றல் செயல்பாடாக மாறுகிறது. ஆசிரியர் சில நேரங்களில் மாணவர்களோடு மாணவராக மாறும்போது, ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையிலான இடைவெளி இயல்பாகவே குறைகிறது. அப்போது மாணவர்கள் ஆசிரியரைத் தங்களுக்கு மேலே நிற்கும் ஒருவராக அல்லாமல், தங்களோடு இணைந்து பயணிக்கும் ஒருவராகப் பார்க்கத் தொடங்குகிறார்கள்.
ஆசிரியர் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும்போதும், வரையும்போதும், பாடும்போதும், கதை சொல்லும்போதும், கேள்வி கேட்கும்போதும் கற்றல் என்பது ஒருவழிப் பயணமாக இல்லாமல், இருவழிப் பயணமாக மாறுகிறது.
குழந்தைகளின் சம உயரத்தில் ஆசிரியர் நிற்கும் அந்தத் தருணங்கள்தான் நம்பிக்கையையும், சுதந்திரமான பங்கேற்பையும், மகிழ்ச்சியான கற்றலையும் உருவாக்குகின்றன. இப்படிப்பட்ட செயல்பாடுகளே ஆரோக்கியமான வகுப்பறைச் சூழலுக்கும், அர்த்தமுள்ள கற்றலுக்கும் சாத்தியமாக அமைகின்றன.
********



Comments